Saturday, June 25, 2016

சுயம்பு யார்?

உம்முள் உறையும் மெய்யான கடவுளே சுயம்பு. அது அம்மையப்பராய் அனுமன் காட்டியவாறு உம் மார் நடுவில் இருதயத்தில் விழித்திருக்கிறது. அதுவே உமக்கு பரிபூரண மெய்ஞ்ஞானத்தைப் புகட்டும் குருவாயும் உள்ளது. இருக்குமிடமாம் உம்மெய்யுள் அது மெய்க்கு மெய்யாய் உயிர்க்குயிராய் உள்ளது

உள்ளது = உள் ள் அது
உம் உள் சுயம்பு அது ளகர மெய் சுட்டும் 16ம் அருளாதாரச் சத்தியப் பேருலகாய் ஈரேழு மற்றும் மனித 15 உலகங்களுக்கு அப்பால் மேலேழு கீழேழு உலகங்கட்கு நடுவில் உள்ள 8ம் மனித உலகின் நடு நடுவில் இருதயத்தில் உள்ளது

அனுமன் மார்பைப் பிளந்து காட்டும் படத்தில் இப்பரம இரகசியம் பாமரனும்புரிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாய் அறிவிக்கப் பட்டுள்ளது. மொழியின்றி அனுமன் புகட்டும் பேருபதேசம் இது. சீதாராமர் வரையவொணா வரையரைகளற்ற சுயம்பு அம்மையப்பரையும், அனுமன் அம்மையப்பர் சமேத சற்குருவையும் சுட்டுகிறது

சுயம்பு மும்மூலமாய் தாய் தந்தை குருவாய் உம்முள் உள்ளது

வள்ளல் பிரான் சுயம்புத் தந்தைத் தன்மையை தனிப்பெருங்கருணை என்றும், சுயம்புத் தாய்மையை அருட்பெருஞ்ஜோதி என்றும் அறிவித்திருக்கிறார், இத்தாய் தந்தையே நம் குருவாகையால். தம்மை அவர் குருவாக வெளிப்படுத்திக் கொள்ளாத பேரடக்கத்தில் வாழ்ந்தார்

15 உலகங்களில் உள்ளது எதுவும் உள்ளவர் எவரும் குருவல்ல. இருதய நடுவிலிருந்து 16 ம் பேருலகாய் அனகமாய் அகண்டுள அம்மையப்பர் சுயம்புவே குரு.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடந்தேடி எங்கெங்கோ அலைகின்றாயே ஞானத் தங்கமே

இருக்கும் இடம் = நடு எட்டாம் உலகின் நடு நடு இருதயம்
இல்லாத இடம் = ஈரேழு 14 உல்கங்கள் மற்றும் எட்டாம் மனித உலகின் இருதயம் அல்லா இடங்கல்

அஞ்ஞானத் தகரத்தை ஞானத் தங்கமென அவர் அழைப்பது, தகராலய இரகசியத்தைத் தகரம் புரியும் என்ற அசையாத நம்பிக்கையில்

புற உருவை குரு என்று முதன்மைப் படுத்தி, அகஉருவை சுயம்பு அம்மையப்பர் குருவை அலட்சியம் செய்ததே நம் அவலத்தின் பிரதான காரணம்

புறவுரு நாட்டம் எனும் தூல நாட்டத்தை அவ காமத்தினும் அழுத்தமான அப்பற்றை அறவே விட்டாலன்றி சுயம்புவை உணர முடியாது, சிரஞ்ஜீவியாக முடியாது

No comments:

Post a Comment