Saturday, June 25, 2016

தூல நாட்டம் விடுதல்

தூல நாட்டம் விடுதலும் நிற்குண தீக்கையும்

ராமகிருஷ்ண பரமஹம்சர் காளி கோயிலின் வெளியே தியானத்திலிருந்தார். அப்போது தோத்தாத்திரி என்பவர் அங்கே வந்து கீழே இருந்த கண்ணாடித் துண்டால் அவர் நெற்றி நடுவில் செங்குத்தாகக் கீறி, இப்போது என்ன தெரிகிறது, சொல் என்று கேட்டார், ராமகிருஷ்ணர் என் அன்னை காளி தெரிகிறாள் என்றார். உடனே தோத்தாத்திரி ஞான வாளால் அவளை வெட்டு என்றார். காளியின் மீது தூல நாட்டம் மிகக் கொண்ட ராமகிருஷ்ணர் ஐயகோ, என் அன்னையை எப்படி வெட்டுவேன், அது என்னால் இயலாது என்று மறுத்தார். உடனே தோத்தாத்திரி அப்படியாயின் நிற்குண நிலை உனக்குக் கிடையாது என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினார். அக்கணமே ராமகிருஷ்ணர் காளியின் தோற்றத்தை ஞான வாளால் வெட்டி நிற்குண நிலைக்கு ஏறினார்.

இதனால் நாகம் சொல்வது என்னவென்றால் தூல நாட்டத்தை புறவுரு நாட்டத்தை விட்டாலன்றி நிற்குண நிலைக்கு ஏற முடியாது, அந்நிலைக்கும் மேலான நடு நிலை சுயம்புவை உணர முடியாது

No comments:

Post a Comment