Saturday, June 25, 2016

சுத்த சமரசம்

சுயம்புவுக்கு எதிரியோ எதிர்ப்போ அறவே கிடையாது. எனவே யுத்த களமே தன் சுயம்புத் தன்மையை மறந்தவர்களால் குறிப்பாகக் கால புருஷனால் உருவாக்கப்பட்ட மாயை. மெய்யான கடவுள் சுயம்பு அருட்பெருஞ்ஜோதியாகத் தனிப்பெருங்கருணையாக எல்லாவற்றையும் நிபந்தனைகளின்றி நேசிப்பவராகவே இருக்கிறார்

துவிதமாகிய இருமையே யுத்த களம், அத்துவிதமாகிய பரிபூரண ஒருமையே யுத்த களத்தைக் கரைக்கும் ஞானாய்தம், நேசாய்தம், போதாய்தம்.

சுயம்பு பரிபூரண நடுநிலையில் உள்ளது, ஒருதலைப் பக்க வாத நோய் அதற்குக் கிடையாது

கணியன் பூங்குன்றனாரின் பாடல் "பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என்று முடியும், ஏனென்றால் சுயம்பு பெரியோரிலும் சிறியோரிலும் நல்லவரிலும் தீயவரிலும் மெலிந்தோரிலும் வலியோரிலும் சரி சமமாகவே சுத்த சமரசமாகவே உள்ளது.

சுயம்புவை முழுதாய் உணர்ந்து, பரிபூரண மெய்ஞ்ஞானத்தில் நிலை பெற்று, யுத்த களங்கள் யாவற்றையும் இல்லாமல் செய்வதுவே, நன்று தீது தாண்டிய வல்லமை

பெரிய வாள் எதற்கு
சின்ன வாள் எதற்கு
ஞான வாள் எங்கே போனது

சுயம்புச் செம்பொருளை ஐயந் திரிபறக் காண்பவர்களே சிறந்தவர்கள்

அத்தகையோரே நிசமான வல்லவர்கள்

No comments:

Post a Comment