இப்பேருபதேசத்தின் சாராம்சம் இதுவே, சுயம்புவைத் தவிர்த்து நமக்கு நற்கதியில்லை, அவ்வள்ளன்மையைப் பரிபூரணமாகச் சரணடைவதே மெய் வழி
நாம் பிறந்துள்ளோம் என்பதே நம் அறியாமையின் சத்தியப் பிரமாணம்
சுயம்புவின் பேரருளால் இறப்பையும் பின் பிறப்பையும் தவிர்ப்பதே பரிபூரண மெய்ஞ்ஞானத்தின் சத்தியப் பிரமாணம்
தன் உடம்பை இறவா மெய்யாக்க முடியாத தன் உயிரைப் பிறவா நித்தியமாக்க முடியாத எந்த உபதேசி பின்னும் நாம் ஓட வேண்டாம்
பேருபதேசமான சுயம்புவே நம் குரு, அவரே பரிபூரணமெய்ஞ்ஞானத்தை நமக்கு அளிக்க வல்லவர்
இச்சடை தாடி கொண்ட நாகமும் உமக்கு குருவல்ல
நாகம் மாத்திரமோர் உபதேசி, பேருபதேசமே நாகத்தைப் பேச வைக்கிறது
No comments:
Post a Comment