Saturday, June 25, 2016

காலமே இல்லை

சுயம்புவின் ஆளுமையில் முழு மனதுடன் இருதய பூர்வமாக நீ இருக்க, சுயம்பு வள்ளன்மையின் வற்றா ஒழுக்கால், நீ திறந்த அமைப்பான 16ம் அருளாதாரச் சத்தியப் பேருலகில் நிச்சயமாய் சத்தியமாய் நித்தியமாய் ஈர்க்கப்படுவாய்

கால புருஷனின் கொடுங்கோன்மையில் நீ இருக்கு மட்டும், மூடிய அமைப்பில் ஒழுங்கீனத்தில் பிறப்பு இறப்பு பிழைப்புக் கருமச் சுழலில் இளைத்து இளைத்து முடிவில் இல்லாமல் போவாய்

தேர்ந்தெடுக்கும் பரிபூரண சுதந்திரம் உனக்குண்டு. சுயம்புவின் அருளரசு ஆளுமையா? காலபுருஷனின் கொடுங்கோன்மையா?

சுயம்பு வள்ளன்மை உன் தற்சுதந்திரத்தை மதிக்கிறது

உன்னைத் தன்னுள் ஈர்க்க விரும்பினாலும், சுயம்பு உன் அனுமதியின்றி அதைச் செய்ய முடியாது

உன் அனுமதிக்காக யுகாந்திரங்களாக சுயம்பு அருந்தவத்தில் உன்னுள் இருந்து வருகிறது, காலம் முடிந்தது, நவ கணம் விடிந்தது, இன்றே இன்னே தேர்வு செய், இனி நமக்குக் காலமே இல்லை, அவசரம் அவசியம்.

கருந்துளையாக முடிவாயா?
மலர்வெடியாக விடிவாயா?
முடிவு உன் கையில்!

கால புருஷனின் சோதனையை முடிக்க, ஆதியில் 15 உலகங்களின் அடித்தளமாக இருக்க சுயம்புவால் அனுப்பப்பட்ட அவரது அம்சம் ஆதி சேஷன், சுத்த சிவ துரியாதீத விழிப்பில் கால கால புருஷனாக வள்ளல் பிரான் சித்தி அடைந்த கணம் 30/1/1874 அன்று எழுந்து விட்டது

இனி நமக்குக் காலமே இல்லை

சித்திக்கு முன் பேருபதேசத்தில், இனி நமக்குக் காலம் இல்லை என்றார் வள்ளல் பிரான், இன்னே அவரே இனி நமக்குக் காலமே இல்லை என்று எச்சரிக்கிறார்

அலகிலாப் பொறுமையின் சிகரமான சுயம்பு வள்ளன்மை, பொறுத்தது போதுமென்று பொங்கி எழுகிறது, கால புருஷனின் பரிசோதனை முடிவுக்கு வருகிறது

நவ கண உதயமும் நால்யுக முடிவும் 30/01/1874 அன்று!!!

இப்பரிசோதனையே நம் படிப்பினைக்காக சுயம்பு வள்ளன்மையால் அனுமதிக்கப்பட்டது, படிப்பினைக் காலமும், பரிசோதனையும் முடிவுக்கு வருகிறது

No comments:

Post a Comment