Saturday, June 25, 2016

பிரார்த்தனை 3

கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

15 உலகங்களில் கற்ற ஞானம் அனைத்தும் கைம்மண்ணளவு, இருதய நடு சுயம்பு ஞானம் 16ம் அகண்ட பேருலகளவு

அப்பெரு அலகிலா ஞானம் நாம் கல்லாதது

எத்தகைய பேரடக்கம் வேண்டும் நமக்கு!

அத்தகைய பேரடக்கத்தில் நாகம் காணாமல் போய் விடுகிறது, நான் எனுஞ் சுயம்பு ஒன்றே நிற்கிறது!

பெருமதிப்பிற்குரிய என் உள்ளீடான உள்ளடக்கமான சுயம்பு குருவே! உம் அரும்பெரும் விழிப்புத் தவத்தை இது வரை அறியாதிருந்த ஒன்றுமில்லா சூன்யமான என்னை மன்னித்தருளி, கண்டிப்பிலிருந்தும், தண்டிப்பிலிருந்தும், அழிப்பிலிருந்தும் அடியேனைக் காத்து உம்மோடு இணைத்து என்னை முழுமையாக்கி இரட்சிப்பீராக!

பேரடக்கத்தைக் கைக்கொள்ள இச்சிறு பிரார்த்தனை உதவும்

No comments:

Post a Comment