Wednesday, June 1, 2016

சுயம்புவும் வள்ளல் பிரானும்

தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா பட்டுக்கோட்டையாரின் ஞானப் பா.

எல்லாம் என்னும் சமுதாயம் முழுதாய் மாற வேண்டுமென்றால் முதலில் நீ முழுதாய் மாற வேண்டும்

நில்லா உன்னுயிர் நித்திய சுயம்புவாகவும் பொய்யாம் உன்னுடல் சத்தியமெய்ச் சுயம்புவாகவும் மாற முடியும் என்பதை ஐயந்திரிபற நீ உணர வேண்டும்

இதைச் செய்ய முடிந்த நிச்சய சுயம்பு உன்னுள் விழித்திருப்பதையும் நீ உணர வேண்டும்

அச்சுயம்புவே திருவருட்பிரகாச வள்ளலார்

சிதம்பரம் இராமலிங்க அடிகளார் நிச்சய சுயம்புவாகிய அக்கடவுளுக்கு இட்ட பெயரே அவர் நித்திய சத்திய சுயம்புவானதும் அவருக்கும் அப்பெயர் ஆனது

எனவே அச்சுயம்புவாம் சற்குருவையே அவர் முதன்மைப்படுத்தினார், தன்னையல்ல, அதுவே அவர் நமக்குப் போதிக்கும் பேரடக்கம்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான், வாலியாரின் ஞானப்பா, சிதம்பரம் இராமலிங்க அடிகளார் என்ற ஒருவர் விரும்புவதுவும் அதுவே, ஊராகிய இச்சமுதாய முழுமையும் அந்நிலை எய்த வேண்டும்

ஊருக்குக் கொடுத்தார் சுயம்பு வள்ளலார்

நம் பணி அவர் ஊருக்குக் கொடுத்ததை ஊருக்குச் சேர்ப்பதுதான்

No comments:

Post a Comment