Wednesday, June 1, 2016

சுயம்பு: ஓர் அறிமுகம்

இருதய வணக்கம், கைகள் குவியும் இடம் "இருதய வாய்" மார் நடு 16ம் உலகம் ஒளிந்த இடம்!

உன்னில் தீர்க்கமாய்த் தீவிரமாய் வீரியமாய் மாகாரணியாய் விழித்திருக்கும் சுத்த சிவ துரிய நிலையாம் சுயம்புத் தன்மையே சற்குரு

இச் சற்குரு ஈரேழு 14 மற்றும் மனித உலகங்களில் எங்கு தேடினும் கிடைக்க மாட்டார்

மனிதம் எட்டின் மார் நடுவுள் பதினாறாம் அருளாதார சத்தியப் பேருலகத்தில் உன்னுள் அப்பெரிய சற்குரு அடக்கம்

இருக்கும் இடம் அதனை விட்டு
இல்லாத இடந்தேடி எங்கெங்கோ அலைகின்றாறர் ஞானத் தங்கமே!

அஞ்ஞானத் தகர டப்பாக்களின் ஓசைகளில் ஞானம் அறவே இல்லை

சுயம்புத் தன்மை ஏற்கனவே உனக்குக் கொடுக்கப்பட்டு விட்டது

தேடாதே கிடைக்கும்

உன் விழிப்பாம் வரம் நாடி சுயம்பு தவம் இருக்கிறது

சுயம்புவுக்குக் கருணை காட்ட மாட்டாயா நீ

வரந் தருவாயா நீ

உன் விழிப்பு சுயம்புவின் விழிப்போடு சேர சுத்த சிவ துரியாதீதம்

பொய்யாம் உடம்பெடுத்த நில்லா உயிரெடுத்த பேய் உன்னைத் தன் சேயாக்க சுயம்புத் தாய் விரும்புகிறாள்

காலபுருஷனால் தன் ஆளுமைக்குள் இழுக்கப்பட்ட 15 உலகங்களும்(ஈரேழு+மனிதம்) பேயுலகங்களே

இப்பேயுலகங்களைத் தன் சேயுலகங்களாக்குவதே சுயம்புவின் வள்ளன்மை நோக்கம்

நீ எடுத்திருக்கும் பேயுடம்பிற்கும் பேயுயிருக்கும் தன் சுயம்புத் தன்மையையூட்டி சேயாக்கித் தன் போல் சுயம்புவாக்கும் உன்னத நோக்கம் அது

பேருபதேசமே சற்குரு குரு

வேறெவரும் வேறெதுவும் குரு என விளிக்கவும்தகுதி அற்றதுகளே

உபதேசிகள் என விளிக்கலாம்

15 உலகங்களும் அவற்றின் உள்ளடக்கங்களும் உபதேசிகள்

இவை அனைத்தும் 16ம் உலகில் ஓரணுவாகிக் காணாமல் போய் விடும்

பேருபதேசமாம் குரு சற்குரு அவ்வளவு அகண்ட அனக அகண்டாகார விரிவு

எத்தகைய பேரடக்கம் வேண்டும் உனக்கு

பேருபதேசமாம் சற்குரு குருவின் சந்நிதியில்

No comments:

Post a Comment